தெரியுமா சேதி... டாடா ஷேர்கள் நச்சுனு இருந்தது... வெளியானது நான்காம் காலாண்டு முடிவுகள்!

 
ரத்தன் டாடா

உயர உயர பறக்க ஆரம்பித்து இருக்கிறது இந்திய பங்குச்சந்தைகள். இந்நிலையில் தரமான சம்பவங்களும் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆமாங்க... தரமான பங்குகளில் முதலீடு செய்தால் தரமான லாபமும் கிடைக்கத் தானே செய்யும்.  அப்படி இரண்டு டாடா குழும பங்குகளின் நாலாம் காலாண்டு முடிவுகளும் நச்சுனு இருக்கு என்கிறார்கள் நிபுணர்கள். அந்த பங்குளின் லாபத்தை எடுக்க முற்பட்டு டாடா மட்டும் காட்டிடாதிங்க. அந்த பங்குகள்  நீண்ட காலம் நல்ல வருவாயைக் கொடுக்குமாம் !. 

Tejas Networks Limited :

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் என்பது ஆப்டிகல் மற்றும் டேட்டா நெட்வொர்க்கிங் தயாரிப்பு நிறுவனமாகும். இது அதிவேக தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கான உயர் செயல்திறன் தயாரிப்புகளை வடிவமைத்து, உருவாக்குகிறது மற்றும் உற்பத்தி செய்கிறது. உள்நாட்டில் இருந்து அதன் வருவாயின் பெரும் பகுதியைப் பெறுகிறது. இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள். இணைய சேவை வழங்குநர்கள், பயன்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கான சேவைகளை செய்கிறது. கடந்த வாரம், நிறுவனம் நான்காம் காலாண்டு மற்றும் 2022-2023 நிதியாண்டு தொடர்பான முடிவுகளை அறிவித்தது. 

 தேஜாஸ் நெட்வொர்க் கேபிள்

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய்கள் Q3ல் ரூபாய் 275 கோடியிலிருந்து Q4ல் ரூபாய் 300 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆண்டு அடிப்படையில்,  2021-2022 நிதியாண்டில் ரூபாய் 550 கோடியிலிருந்து 67 சதவிகிதம் அதிகரித்து 20222-2023ம் நிதியாண்டில் ரூபாய் 920 கோடியாக அதிகரித்துள்ளது. தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்குகள் வெள்ளியன்று கிட்டத்தட்ட 4.58 சதவிகிதம் அதிகரித்து ரூ.658.80 என்ற விலையில் முடிவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில், இந்நிறுவனம் ரூபாய் 569 இலிருந்து தற்போதைய நிலைகளுக்கு அதாவது 15 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இரண்டு வருட காலத்தை கணக்கில் கொண்டால், பங்குகள் சுமார் 250 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கியிருக்கிறது. இந்த பங்கில் ஒருவர் 1,00,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது இரண்டு வருட காலத்தில்  3,50,000 ரூபாயாக மாறியிருக்கும்.

Indian Hotels Company Limited: இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாடா குழுமத்தின் ஓர் அங்கம். என்றுமே இல்லை உங்களின் முதலீட்டிற்கு பங்கம். சர்வதேச ஓய்வு மற்றும் ஹோட்டல் சேவை நிறுவனமாகும். இது SeleQtions, Vivanta, The Gateway, Ginger, Taj போன்ற பிராண்ட் பெயர்களில் ஹோட்டல்களை நடத்துகிறது. உள்நாட்டு சந்தைகளைத் தவிர, இந்நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே அமெரிக்கா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் செயல்பாடுகளை கொண்டிருக்கிறது.

 சர்வதேச ஓட்டல்

இந்நிறுவனம் நான்காம் காலாண்டு மற்றும் 2022-2023 நிதியாண்டு தொடர்பான முடிவுகளை அறிவித்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயில் 3ம் காலாண்டில் 1,686 கோடி ரூபாயில் இருந்து Q4ல் 1,625 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆண்டு அடிப்படையில், மேற்கூறிய 2021-2022ம்  நிதியாண்டில் ரூபாய்  3,056 கோடியிலிருந்து 90 சதவிகிதம் அதிகரித்து 2022-2023ம் நிதியாண்டில் ரூபாய் 5,810 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் பங்குகள் 2.4 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டு ரூபாய் 340 என  முடிவடைந்தது. கடந்த ஒரு மாத காலத்தில், நிறுவனம் ரூபாய் 319ல் இருந்து தற்போதைய நிலைக்கு உயர்ந்து  6 சதவிகிதத்திற்கு  மேல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பங்குகள் 214 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கி இருக்கிறது. அதாவது 1,00,000 ரூபாயை பங்குகளில் முதலீடு செய்திருந்தால், அது தற்பொழுது 3,14,000 ரூபாயாக மாறி இருக்கும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web