உங்க ஆதார் அட்டையும் காலாவதியாகும் தெரியுமா? எப்படி சரி செய்வது... முழு விவரம்!

 
ஆதார்

இன்று ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் ஒவ்வொரு வேலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் இல்லையெனில் அரசாங்கத்தின் எந்தத் திட்டங்களையும் நீங்கள் பயன்படுத்த முடியாது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி KYC வரை இது இல்லாமல் செய்ய முடியாது. சில ஆதார் கார்டுகள் காலாவதியும் ஆகி உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

உங்கள் ஆதார் அட்டை காலாவதியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.  உங்கள் ஆதார் அட்டையை வைத்து உங்கள் ஆதார் அட்டை செல்லுமா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். இதன் மூலம், உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எப்பொழுதும் உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை நீங்கள் ஆன்லைன் மூலமே சரிபார்க்கலாம். குழந்தைகளின் ஆதார் அட்டை 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படாவிட்டால். அது செயலிழந்துவிடும். உங்கள் ஆதார் அட்டையை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் பயோமெட்ரிக் தரவைப்புதுப்பிக்க வேண்டும்.

ஆதார்

இதற்குப் பிறகு, குழந்தையின் ஆதார் அட்டைக்குப் பதிலாக இரண்டாவது ஆதார் அட்டை உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, 15 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆதார் அட்டையை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டை எப்போதும் செயலில் இருக்கும் வகையில், ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும் போது சரியான தகவலை வழங்க வேண்டும் இல்லை எனில் பின்னாளில் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.

ஆதார்

சரி எப்படி சரிபார்க்கலாம்... முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இணையதளம் திறந்த பிறகு, முகப்புப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். "ஆதார் சேவை" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்களின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் ஆதார் அட்டையைச் சரிபார்க்கலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web