முதலாளிகளுக்கு பிடிவாரண்ட்... தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியதால் விபரீதம்!

 
மியான்மர்

2021 ஆம் ஆண்டு மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்தது அதிகாரத்தை கைப்பற்றியது. இதன் பின்னர் இராணுவம் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மியான்மரில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதாக கடைக்காரர் ஒருவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது. இதேபோல் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் இல்லையா, பிறகு ஏன் கைது செய்தார்கள்? என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அந்நாட்டு அரசு வேறு காரணத்தை கூறியது.

மியான்மரில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி உயரும். பணவீக்கம் உயரும் வேளையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால், இந்த நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக மக்கள் நம்பத் தொடங்குவார்கள். இது அரசுக்கு தலைகுனிவு. இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.மியான்மரின் இந்த நடவடிக்கையால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web