வைரல் வீடியோ... கண்ணீருடன் விடைபெற்ற தினேஷ் கார்த்திக்!

 
தினேஷ் கார்த்திக்


 1985 ல் ஜூன் முதல் தேதியில்  சென்னையில் பிறந்தவர் தினேஷ் கார்த்திக். இவர் தொடக்கத்தில்  டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தனர்.  தினேஷ் கார்த்திக்  2018ல்  ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து  4 ஆண்டுகள் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். 2022 ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உட்பட மொத்தம் 4842 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97* ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் தொடங்கும் போதே  இது தான் தனது கடைசி ஐபிஎல் சீசன் என்று அறிவித்தார் தினேஷ் கார்த்திக்.


தோல்வியோடு தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ்  ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது.   கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நெட் ரன்ரேட் அடிப்படையில் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆஃப் சுற்று போட்டியில் எலிமினேட்டரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடியது.   நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்  முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர் .  சஞ்சு சாம்சன் 17, துருவ் ஜூரெல் 8, ரியான் பராக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்களில் வெளியேற, கடைசியில் ரோவ்மன் பவல் 16 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தினேஷ் கார்த்திக்
 இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி  எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இது தினேஷ் கார்த்திக்கின் கடைசி ஐபிஎல் போட்டி என்பதால் அவர்  கண்ணீர்மல்க ஓய்வு பெற்றார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு ஆர்சிபி வீரர்கள்  மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்த   வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடிய 15 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்திருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!