தினுசு தினுசா கிளம்புறாய்ங்க... வேலைப் பார்க்கும் நிறுவனத்திலேயே கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.12 லட்சம் கொள்ளை... அதிர வைத்த ஊழியர்கள்!

 
க்
தினுசு தினுசா கிளம்புறாய்ங்களேய்யா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த நிதி நிறுவனத்தின் அதிபர். இத்தனைக்கும் பெரும்பாலான நிறுவனங்களைப் போல ஊழியர்களை நடத்தாமல், எந்த சம்பள பாக்கியும் இல்லாமல் மாதாமாதம் சம்பளப்பணம், இதர வசதிகள் என்று நன்றாக தான் தன் ஊழியர்களை நடத்தி வந்தார் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி பைபாஸ் அருகே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. ஊழியர்களான யுவராஜ்(40), குமார் (23) ஆகிய இருவரும் மகளிர் சுய உதவிக்குழு கடன் வசூலான ரூ.12 லட்சத்தை எடுத்துக் கொண்டு மாசிநாயக்கன்பட்டியில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

பணம் கொள்ளை

உடையாப்பட்டி நூல் மில் அருகே சென்று கொண்டிருந்த போது, ​​நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்து சென்றது. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதேபோல் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கொள்ளையர்கள் தப்பியோடிய வழித்தட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் இருந்து 55 கி.மீ தூரம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளையும், சேலம் ராசிபுரம் - செந்தாரப்பட்டி வழியாக 77 கிமீ தூரம் வரை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. செந்தாரப்பட்டியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

கடத்தல்காரர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், செந்தாரப்பட்டியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இதே நிதி நிறுவனத்தில் பணிபுரியும் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ரவி மகன் புவனேஸ்வரன் (21), செந்தில்குமார் மகன் சுபாஷ் (22) மற்றும் அவர்களது கூட்டாளிகள் கஜேந்திரன் (23), விக்னேஷ் (32) ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்து ரூ.4.50 லட்சம் ரொக்கம், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களுடன் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்டம் தரட்டியூரில் போலீசார் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web