பொறியியல் படிப்புக்களில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

 
கலந்தாய்வு
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும்   400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கான விண்ணப்ப சேர்க்கை முடிவடைந்துள்ளது. இதன் மூலம்  இதுவரை 2,49,918 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஜூன் 12ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த படிப்புகளில் சேர பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு  கால அவகாசம் ஜூலை 7ம் தேதி எனத் தெரிவித்துள்ளது.  

 தமிழகம் முழுவதும்  440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு  வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர  2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும்  பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான   அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு  மே 6ம் தேதி தொடங்கியது.

கவுன்சிலிங்
இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்  2,48,848 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதில் ஏற்கனவே 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.  இன்னும்  1 லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாக  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

கவுன்சிலிங்
ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில்,  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி  ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.   ஜூன் 13 முதல் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு  ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web