நடிகர் லாரன்ஸை அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் சாலை விபத்தில் காலமானார்!

 
அற்புதன்

நடிகர், நடன இயக்குநர் லாரன்ஸை தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் உயிரிழந்தார். இன்று, திகிலோடு பார்த்த பேய் படங்களை குடும்பத்தோடு சிரித்து ரசிக்கும் காமெடியாக கொண்டு வந்து, சந்திரமுகி 2 வரை உயர்ந்து நிற்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி திரையுலகிலும் லாரன்ஸ் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. ரஜினியின் அடுத்த படத்தில் நடிகர் லாரன்ஸ் வில்லனாக நடிக்க வைப்பதற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடன இயக்குநராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸை, 2002ல் அற்புதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அற்புதன். இந்த திரைப்படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

ராகவா லாரன்ஸ்

இதன் பிறகு தான் ராகவா லாரன்ஸ்  பேய் படங்களை காமெடியாக்கி, தன்னுடைய  நடன அசைவின் மூலமாகவும் அனைவரையும் கவர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இயக்குநர் அற்புதன் சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

rip

52 வயதான இயக்குநர் அற்புதன் மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.  இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நடிகர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web