” என் தந்தையின் கனவு நனவாகியது” ... இயக்குனர் இளன் நெகிழ்ச்சி!

ஸ்டார் படத்தின் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் கவின். இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
#StarMovie
— Elan (@elann_t) May 10, 2024
My Day is made when people clapped when my dad appeared on the screen ⭐️ Will be my most fav moment forever ⭐️ love you all ❤️ his long time dream came true ❤️
Loving the response live ❤️
எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார். இந்நிலையில் 'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் இளன் எக்ஸ் பக்கத்தில் தனது தந்தை குறித்து பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.
அதில் 'ஸ்டார் படத்தில் என் அப்பா தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்தது. என் வாழ்வில் இது எனக்கு சிறந்த தருணமாக இருக்கும். என் தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது' எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!