இயக்குநர் விசுவின் மைத்துனர்.. நடிகர் ‘குரியகோஸ்’ ரங்கா காலமானார்... திரையுலகினர் இரங்கல்!

 
குரியகோஸ்

நடிகர், இயக்குநர் விசுவின் மைத்துனர், நடிகர் ‘குரியகோஸ்’ ரங்கா  உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இயற்பெயர் வி. ரங்கநாதன். சிறுவயதிலிருந்தே சிவாஜிகணேசனின் தீவிர ரசிகனான ரங்கநாதன், பிரபல இயக்குநர், நடிகர் விசுவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் விசுவின் “அவள் சுமங்கலி தான்” எனும் நாடகத்தில் ‘குரியகோஸ்’ எனும் கதாப்பத்திரத்தில் நடித்ததில், அந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் அன்றிலிருந்து, ரசிகர்கர்களால் ‘குரியகோஸ் ரங்கா’ என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டு வந்தார்.  இயக்குநர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இவரது நிறைய வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரட்டை அரங்கம் தலைப்பை சொன்னது இவர் தான். அரங்கம் வார்த்தையில் ரங்கா என என் பெயரும் வருவதால் அந்தப் பெயரைச் சொன்னேன் என்பார். விசுவின் பல படங்களில் புகழ் பெற்ற வசனங்கள் ரங்கா சொன்னது என்று விசு தனது நண்பர்களுடனான பேச்சின் போது குறிப்பிட தவறியதில்லை. 

குரியகோஸ்

3,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் நடிப்பு, கதாசிரியர், வசனகர்த்தாவாக இயங்கி உள்ளார். நிறைய குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் முதுகெலும்பாக அந்நிகழ்ச்சி சிறக்க இவரது பங்களிப்பு பெரிது என்று விசுவால் பலமுறை பாராட்டப்பெற்றவர். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?