அமேசான் பார்சலில் அழுக்கான புடவை டெலிவரி... கதறும் அனிதா சம்பத்!

 
அனிதா சம்பத்

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் யூடியூப், மாடலிங், இன்புளூயன்சர்  என பன்முகத் திறமை வாய்ந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்தினாலும்  அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 84வது நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். 


அனிதா சம்பத், அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்தார்.  ஆனால் அவருக்கு அழுக்கான புடவை ஒன்று டெலிவரி செய்யப்பட்டது.  இதனை வேதனையுடன் தனது இன்ஸ்டா  பக்கத்தில் அனிதா சம்பத்  பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “நான் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என நினைத்திருந்த நிலையில் அமேசானில் ஆர்டர் போட்டு காத்திருந்தேன்.  ஜூன் 13ம் தேதி அந்த பொருள் எனக்கு டெலிவரி ஆனது. அந்த பொருளின் விலை ரூ899 . அந்த நேரத்தில் எனக்கு பல டெலிவரிகள். நான் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் இந்த பாக்ஸை உடனடியாக பிரித்து பார்க்க முடியவில்லை.  

அனிதா சம்பத்

இன்று தான் இந்த பாக்ஸை பிரித்துப் பார்த்தேன்.  பார்சலில் உள்ளே அழுக்கு பிடித்த புடவை இருந்தது. ரிட்டர்ன் போடவேண்டிய தேதியும் முடிவடைந்து விட்டது. ஆனால் என்ன பண்றதுன்னே தெரியவில்லை. இதற்கு அமேசான் நிறுவனம்  எனக்கு நியாயமான பதில் சொல்ல வேண்டும். நான் இதற்கு என்ன செய்யலாம் என ரசிகர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்” என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web