வீடு திரும்பினார் வைகோ... தொண்டர்களைப் பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள்!

 
வைகோ

திருநெல்வேலியில் கட்சியின் நிர்வாகியின் மகள் திருமணத்திற்கு செல்வதற்காக மே 25ம் தேதி தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அந்த சமயத்தில் அவர் கால் இடறி வைகோ கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால் அவரது  இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

வைகோ

இதையடுத்து முதலுதவிக்கு பிறகு சென்னை அழைத்து வரப்பட்டு  ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மே 29ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.  

வைகோ ஸ்டாலின்
இந்நிலையில் இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பியுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என மதிமுக தலைமை தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web