ரிட்டர்ன் டிக்கெட்டுடன் முன்பதிவு செய்வோருக்கு 20 % தள்ளுபடி... இந்தியன் ரயில்வே தள்ளுபடி!
இந்தியா முழுவதும் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே சாய்ஸாக இருந்து வருவது ரயில்கள் தான். இதில் சாதாரண நாட்களை கடந்து பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. இன்னும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் ரயில்வே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பண்டிகை காலங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் சேர்த்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஊருக்கு செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது என இரண்டு பயணத்தையும் முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு இந்த சலுகை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வகுப்பில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இப்படி ரவுண்ட் டிரிப் பேக்கேஜை பயன்படுத்துவோருக்கு மொத்த கட்டணத்தில் 20% சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஆர்ஏசி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு பொருந்தாது . இந்த சலுகையை பயன்படுத்தி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் அல்லது நேரில் சென்று முன்பதிவு செய்தாலும் இந்த தள்ளுபடி பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற ரயிலில் பயணிக்கும் தேதி அக்டோபர் 13 முதல் 26ம் தேதி வரையிலும், ரிட்டர்ன் பயணம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ம் தேதி வரையிலும் இருக்க வேண்டும். இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 1 4ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
