டீசல் பேருந்துகள் இயங்கத் தடை.... அதிரடி உத்தரவு...!!

 
பேருந்துகள்

தீபாவளி பண்டிகை க்கு இன்னும் சில நாட்களே உள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் இந்தியா முழுவதும் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில்  பட்டாசு வெடிக்க தடையும், சில மாநிலங்களில் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில்  தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால்   அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

சிக்னல்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “   கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி 397 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு  அக்டோபர் 31ம் தேதி  செவ்வாய்க்கிழமை நேற்று 325 ஆக இருந்தது. இது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருவதாகக் கூறினார்.   வாகன ஓட்டிகள்  சிவப்பு சிக்னலின் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்க வேண்டும் என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் டீசல் பேருந்துகள் இயங்குவதால் மாசு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.  
பேருந்துகள்
இதனால் ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் என்சிஆர் பகுதிகளில் இயக்கப்படும் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.  டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளார். 
அதன் ஒரு பகுதியாக  இன்று முதல் டெல்லி மற்றும் என்சிஆரில் உள்ள ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான்   மாநிலங்களுக்கு   இடையே மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ்-6 பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.  விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web