கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு.. கொலையில் முடிந்த விபரீதம்.. அதிர்ச்சி பின்னணி!

 
முச்சந்தி காளியம்மன் கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது. திருவிழாவில் நடனமாடியபோது மோகன்ராம், பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த விக்கி (வயது 20) என்பவருக்கும் அவர்களது நண்பர்கள் பிரித்தீவிராஜ் (21), காக்கா (எ)டேவிட் (18) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சண்டை

இந்நிலையில் பெருமாள் வடக்கு 2ம் சந்தில் திருவிழா நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், மோகன்ராம் திருவிழாவின் போது நடந்த சண்டை தொடர்பான வீடியோவை வெளிநாட்டில் இருந்த நண்பர் உதயகுமார் காட்டி பேசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த விக்கி மோகன்ராம் மீது கோபமடைந்து, அவரது நண்பர்கள் பிரிதிவிராஜ், காக்கா (எ) டேவிட் உள்ளிட்ட 5 பேர் உதயகுமார் வீட்டு வாசலில் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு கைகலப்பாக மாறாமல் தடுக்க உதயகுமாரின் தந்தை பக்கிரிசாமி முயன்றார். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பக்கிரிசாமியை தள்ளியதில் அவர் கீழே விழுந்ததில் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரித்தீவிராஜ் , விக்கி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர். நாகையில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web