பள்ளி வாசலில் தகராறு.. 3 முறை கன்னத்தில் அறைந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி.. ஆங்கிலே இந்தியர் கைது!

 
செல்வம்

சென்னை ராயபுரம் சிஜி காலனி 7வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (60). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு வாசுகி (55) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். செல்வம், பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியில் வசிக்கும் லலிதா (55) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் எஸ்ஆர்பி கோவில் தெருவின் தெற்கு பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அருகே செல்வம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர், அவர்களை அழைத்துச் செல்ல பெற்றோரும் வந்தனர். இந்நிலையில், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியரான ரிக்கார்டோ (36) என்பவர் தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனை அழைத்துச் செல்ல பைக்கில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் செல்வம் பள்ளி வாசல் அருகே ஆட்டோவை நிறுத்தினார். இதைப் பார்த்த ரிக்கார்டோ ஆட்டோவை ஓரமாக நிறுத்தச் சொன்னார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்  ரிக்கார்டோவை செல்வம்  தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரிக்கார்டோ, பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செல்வத்தின் கன்னத்தில் பளார்... ப்ளார் என்று 3 முறை அறைந்தார். இதில் செல்வம் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ஆட்டோ டிரைவர்கள் இது குறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரிக்கார்டோவை கைது செய்து விசாரணை நடத்திய போது, ​​தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் செல்வம் அடித்ததாகவும், அவர் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த செல்வம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ரிக்கார்டோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web