அதிர்ச்சி... பிறந்தநாளில் ஆடியோ வெளியிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை!
பிறந்தநாளில், ஆடியோ வெளியிட்டு கல்லூரி மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பச்சையப்பன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சத்தியநாராயணன் (20).
கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்த சத்தியநாராயணன், கல்லூரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முன் மாணவர் சத்தியநாராயணன் பேசிய ஆடியோ கிளிப் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனக்கு பயமாக இருக்கிறது. ஏதாவது செய்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். பிறந்தநாளில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “உயிரிழந்த மாணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சக மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சமரசம் பேசியதாக தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!