பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு.. நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்ட தனியார் பேருந்து ஊழியர்கள்!

 
கும்பகோணம் பேருந்து

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை கும்பகோணம் நால்ரோடு, சிஆர்சி டெப்போ, பாலக்கரை, அரசு மருத்துவமனை, மகாமக குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இந்நிலையில் இன்று கும்பகோணம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அதன் பின் புறப்பட்ட மற்றொரு மினி பஸ், ஏற்கனவே புறப்பட்ட மினி பஸ்சை முந்திக்கொண்டு அரசு மருத்துவமனை முன் பயணிகளை ஏற்றிச் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த முதல் மினி பஸ் டிரைவர், பஸ்சை ரோட்டில் நிறுத்தி, தன்னை முந்தி சென்ற மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளை ஏற்றினார். இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் சத்தம் போட்டதை தொடர்ந்து மினி பஸ்சை எடுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web