விநாயகர் ஊர்வலத்தில் தகராறு... இளைஞர் அடித்துக் கொலை... திருச்சியில் பரபரப்பு!

 
கொலை

விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கல்லால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி சிறுமயங்குடியில் வசித்து வருபவர்  புவியரசன் . இவரது மகன் ஹரிஹரகுமார். இவர் ஐடிஐ முடித்து விட்டு போர்வெல் குழாய் அமைக்கும் பணிபுரிந்து   வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் 26 வயது சற்குணம். இவர்களது கிராமத்தில் நடைபெற்ற  விநாயகர் சதுர்த்தி விழாவில் காளியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆகஸ்ட் 30ம் தேதி  இரவு ஊர்வலமாக எடுத்து சென்று வாய்க்காலில் கரைக்கப்பட்டது. அப்போது ஹரிஹரகுமாருக்கும், சற்குணத்துக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காளியம்மன் கோவில் அருகே  ஹரிஹரகுமார் செல்போனில் பேசி கொண்டிருந்த போது அங்கு அந்த பன்னீர்செல்வம், மகன் சற்குணம் மற்றும் நண்பர்கள் முகிலன், சஞ்சய், சரவணன் ஆகியோர்  விநாயகர் சிலை கரைப்பு தகராறு குறித்து மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர். 

விநாயகர்

இந்தத் தகராறில் பன்னீர்செல்வம், சற்குணம் ஆகியோர் ஹரிஹரகுமார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் தடுமாறி விழுந்த அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?