குளிர்சாதன பெட்டி அருகே உட்காருவதில் தகராறு.. வெடித்த கலவரத்தில் நின்று போன திருமணம்.. குமுறும் மணமகன்!

 
ஹும்சந்த்

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில், குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்ததற்காக விருந்தினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணமகள் மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். பின்னர் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தும் எந்த முடிவும் இல்லாமல் முடிந்தது. இதையடுத்து, இரு தரப்பு மக்களும் போலீஸாரை அணுகினர்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீசாரும் சமரசம் செய்ய முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை. பின்னர், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, அமைதியைக் குலைத்ததாக இரு தரப்பினருக்கும் ரூ.151 அபராதம் விதித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.முஸ்தபாபாத்தைச் சேர்ந்த ஹும்சந்த் ஜெய்ஸ்வால் என்ற மணமகனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என மணப்பெண்ணிடம் முறையிட்டு சமாதானப்படுத்த முயன்றதாக மணமகன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

திருமண விழா முடிவடையும் தருவாயில் இருந்ததால், குளிர்சாதனப் பெட்டியின் அருகில் அமர்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மமணப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் அவளை சமாதானம் செய்ய முயன்றனர், இருப்பினும் மணமகள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்ததோடு, தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுத்து 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இந்நிலையில் சம்பவ இடத்தில் அமைதியின்மை நிலவுவதக கூறினர். இந்நிலையில் ஒரு சிறு பிரச்சனை  ஒரு கல்யாண்த்தையே நிறுத்தும் அளவுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web