உருக்குலைந்த பொலிரியோ... லாரியில் மோதி விபத்து... 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

 
விபத்து பொலிரியோ

ராஜஸ்தானின் நடந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து போலீசாரின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் ஒன்றில் கரௌலி மாவட்டத்தில் உள்ள கியோலா தேவி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 பேர் பயணித்துள்ளனர். இவர்களது பொலிரோ வண்டி லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 

லாரி

கரௌலி மாவட்டத்தில் நேற்று ஜூலை 1ம் தேதி மாலை நடந்த இந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பொலிரோ வாகனமும் லாரியும் மோதிய இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். கரௌலி-மந்தராயல் சாலையில் துண்டாபுரா திருப்பத்திற்கு அருகே வேகமாக வந்த பொலிரியோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பொலிரோவின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

விபத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விபத்து குறித்த தகவலை காவல்துறையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தெரிவித்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, பொலிரோ ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாலோ அல்லது லாரியை முந்திச் செல்ல முயன்றதாலோ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

விபத்து

இந்த விபத்தில் லாரிக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தின் மந்த்ராயலில் உள்ள கிர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கலெக்டர் நீலப் சக்சேனா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web