திருமண சர்ச்சைகளால் மனமுடைந்து போனேன்... கலங்கிய பிரியாமணி!

 
பிரியாமணி

 நடிகை பிரியாமணி முஸ்தஃபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண சமயத்தில் வெளியான சர்ச்சைகள் தன்னை மிகவும் பாதித்ததாக  பிரியாமணி மனம் திறந்துள்ளார். முத்தழகாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சியமானவர் நடிகை பிரியாமணி.

ப்ரியாமணி

தற்போது பாலிவுட்டில் அதிக படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ‘மைதான்’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்திற்காக யூடியூப் தளம் ஒன்றில் பேட்டிக் கொடுத்திருக்கிறார் பிரியாமணி. அப்போது தனது திருமண வாழ்க்கைக் குறித்து மனம் திறந்துள்ளார். முஸ்தஃபா ராஜ் என்பவருடன் இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ப்ரியாமணி

இவருக்கு ஏற்கனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் 2013ல் ஆயிஷாவைப் பிரிந்தார். ஆனால், “எங்களுக்குள் விவாகரத்து நடக்கவில்லை” என்று சொல்லி ஆயிஷா, முஸ்தஃபா - பிரியாமணி திருமணத்தில் பிரச்சினை செய்தார். இந்த விஷயம் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதித்தது என்று பிரியாமணி மனம் திறந்திருக்கிறார்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!