விளையாட்டு நிகழ்ச்சிகள்... கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிப்பது சட்ட விரோதம் கிடையாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

 
மதுபானம்

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில், மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் அரசாணையில் சட்டவிரோதம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் திருமண மண்டபம், வணிக வளாகம், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வசதியாக, மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திருமண மண்டபம் உள்ளிட்ட பொது இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டது.

மதுபானம்

எனினும், சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும், மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இவ்வழக்கில், தமிழக உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது.

நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன. வருவாய் நோக்கத்தில் அரசாணை பிறப்பித்ததாகக் கூறுவது தவறு. மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அரசு 4.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

மதுபானம்

மதுபான விற்பனை விதிகளின்படி தான், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என  பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை, ஜூலை 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web