மாவட்ட செயலாளர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகல்... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!
நாம் தமிழர் கட்சியில் சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகினர். அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தனக்கு கட்சியில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கட்சியில் இருப்பவர்கள் தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது எனவும் தன்னுடைய இஷ்டப்படி தான் செயல்படுவேன் எனவும் சீமான் கூறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.இதன் காரணமாக தான் கட்சியிலிருந்து விலகுவதாக சுகுமார் அறிவித்துள்ளார். கடந்த 9 வருடங்களாக கட்சிக்காக என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து விதமான பணிகளையும் சிறப்பாக செய்து வந்தேன்.
ஆனால் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை சீமானால் தர முடியவில்லை அதனால் நான் கட்சியிலிருந்து வேதனையுடன் விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
