மனைவியுடன் விவாகரத்து... விரக்தியில் ஓடும் ரயிலுக்குள் தீ வைத்த கணவன்!

மனைவியுடன் விவாகரத்து காரணமாக விரக்தியின் கணவன், தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்குள் தீ வைத்து வோன் என்ற நபரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார். தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!