பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள்!!
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடத்தப்பட்ட தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்க்ஷதா மூர்த்தி தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Tonight Prime Minister @RishiSunak welcomed guests from the Hindu community to Downing Street ahead of #Diwali – a celebration of the triumph of light over darkness.
— UK Prime Minister (@10DowningStreet) November 8, 2023
Shubh Diwali to everyone across the UK and around the world celebrating from this weekend! pic.twitter.com/JqSjX8f85F
பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் இதுகுறித்து தனது X தளத்தில் “இன்றிரவு பிரதமர் ரிஷி சுனக் தீபாவளிக்கு முன்னதாக இந்து சமூகத்தைச் சேர்ந்த விருந்தினர்களை வரவேற்றார். இது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் கொண்டாட்டம். இந்த வார இறுதியில் கொண்டாடும் இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் சுப தீபாவளி வாழ்த்துகள் !” என்று தெரிவித்துள்ளது. மேலும் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இருவரும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாரம்பரிய தீபங்களை ஏற்றி வைக்கும் படங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்து மதத்தை கடைபித்து வருகிறார். G20 உச்சி மாநாட்டிற்காக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது, புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவிலில் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதியினர் பிரார்த்தனை செய்தனர். அப்போது பேசிய இங்கிலாந்து பிரதமர் "நான் ஒரு பெருமைமிக்க இந்து. நான் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன், அப்படித்தான் இருக்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!