விநோதம்... நாய்களை குளிப்பாட்டி அலங்கரித்து இனிப்புக்கள் வைத்து தீபாவளி கொண்டாட்டம்..!!

 
நாய் தீபாவளி

இன்று தீபாவளி பண்டிகை  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்கள் புத்தாடை பட்டாசு, பலகாரங்கள் , இனிப்புக்கள் , அசைவம் என ஜமாய்த்து வருகின்றன. தீபாவளி திருநாளில்நாய்களுக்கும் விநோத திருவிழா நடத்தப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மட்டுமல்ல தெரு நாய்களையும் மனிதர்களின் நண்பர்களாக பாவித்து அவைகளுக்கும் சிறப்பு செய்வதே இந்த விழாவின்நோக்கம் என்கின்றனர்.  

நாய்


மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரில் இந்த விநோத திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   அந்த பகுதியில் வசித்து வரும்  மக்கள் வளர்ப்பு நாய்கள் என்றில்லாமல் தெரு நாய்களையும் காலையிலேயே குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்து விடுகின்றனர். அவைகளுக்கு , சிறப்பாக சமைக்கப்பட்ட உணவுகளையும், இனிப்புக்களையும் வழங்கி மகிழ்விக்கின்றனர். 

நாய் உணவு


தீபாவளி பண்டிகையையொட்டி இந்த திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து  விலங்குகளுக்கான உதவி மையத்தின் உறுப்பினரான பிரியா ராய்  கடவுளை போன்று தெரு நாய்களை நாங்கள் வழிபட்டோம். தெரு நாய்களுக்கு மதிப்பளித்து, உங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web