65 வருஷமா தீபாவளியே கொண்டாடல... வெறிச்சோடி கிடக்கும் 13 கிராமங்கள்!!

 
தீபாவளி இல்லா கிராமம்

நாளை மறுநாள் நவம்பர் 12ம் தேதி இந்தியா  முழுவதும்   தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது புத்தாடை, பட்டாசு, அசைவ விருந்து ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில்  விருதுநகர் மாவட்டத்தில் 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளியே கொண்டாடுவதில்லை. தீபாவளி என்றாலே  பட்டாசுகள், பலகாரங்கள், புது துணிகள் என   ஒரு வாரம் முன்பு இருந்ததே மக்கள் தயாராகிவிடுவார்கள்.  தங்களது முன்னோர்கள் தீபாவளியை கொண்டாட கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்ததால் இனி தீபாவளியை கொண்டாடவே கூடாது என தீர்மானம் போட்டனர்.

 

தீபாவளி இல்லாம கிராமம்

1958ம் ஆண்டு  முதல்   இன்று வரை இந்த கிராமத்தினர் தீபாவளியே கொண்டாடியதில்லை.  இது குறித்து ஊர் மக்கள்  , "   எங்களுக்கு எப்பவும் தீபாவளி கிடையாது. நாங்க மொத்தம் 13 கிராமத்துல இருக்கிறோம். இங்க இருக்குறவங்க மட்டும் இல்லாம, எங்க ஊரை சேர்ந்தவங்க எந்த வெளியூர்ல இருந்தாலும் அவங்க தீபாவளியை கொண்டாட மாட்டாங்க. மூணு  தலைமுறையா நாங்க இப்படித்தான் இருக்கிறோம்.  வழக்கமாக தீபாவளி அப்போ மழை பெய்யும். மழை பெய்யும்போதுதான் நிலத்துல வேலை இருக்கும். நாத்து நடுறது, களை எடுக்குறது, உரம் போடுறது அப்படினு வேலை டைட்டா இருக்கும். அந்த நேரத்துல கையில பணமும்  இருக்காது. பணம் இல்லாம தீபாவளி எப்படி? அதனால எங்க முன்னோர்கள் கடன் வாங்கி தீவாபளியை கொண்டாடினாங்க.

 

தீபாவளி

ஆனா அந்த கடனை சரியா அடைக்க முடியல. இதனால் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்புறம் ஒருகட்டத்துல 13 கிராமங்களை சேர்ந்த ஜனங்க எல்லாம் மாம்பட்டியில ஒன்னு சேர்ந்து உட்கார்ந்து பேசி இனி தீபாவளியே வேணாம்னு முடிவு செஞ்சிட்டாங்க. இந்த முடிவால எங்க கிராமங்கள் எல்லாம் கடன் பிரச்னை இல்லாம இருக்கு.   தீபாவளிக்கு பதில் நாங்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமா கொண்டாடுவோம். பொங்கல் சீசனுலதான் அறுவடை, புது நெல்,  புது உற்சாகம்,  பணமும் கையில இருக்கும். இதனால தான்  பொங்கல்தான் இனி எங்க பண்டிகையினு முடிவு செஞ்சிட்டோம்.  தொடர்ந்து 3வது  தலைமுறையாக கடைபிடிச்சிட்டு வர்றோம்” எனக் கூறியுள்ளனர்.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web