2 நிமிடங்களில் தீபாவளிக்கான ரயில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன...!

 
ரயில் டிக்கெட்


 இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில்களையே நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்பதால் தான். ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்யலாம்.  அதிலும் குறிப்பாக தென்மாவட்டரயில்கள் முன்பதிவு தொடங்கும் நாளிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.   தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

ரயில்

இதனால் அரசு சார்பில் ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.  சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக டிக்கெட் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில் முன்பதிவானது சில நிமிடங்களிலேயே முடிந்து காத்திருப்பர் பட்டியலுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.  தீபாவளி பண்

டிகை  அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  ரயில் டிக்கெட் முன்பதிவு பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். 
அந்த வகையில் பண்டிகைக்கு 2  நாட்கள் முன்னதாக அக்டோபர் 29ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில் புறப்படுவதற்கு வசதியாக டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.  ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையிலிருந்து மதுரை,  திருநெல்வேலி , தென்காசி ஆகியோர்களுக்கு புறப்படும் பாண்டியன்,  நெல்லை பொதிகை விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு வசதி பெட்டிகளில்,  2 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துள்ளது.  

ரயில்

இதைப்போல் சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்படும் முத்துநகர்,  நாகர்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்,  நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவும்  முடிந்தது.
அக்டோபர் 28ம் தேதி செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு நேற்று நடந்த முடிந்தது.  அக்டோபர் 29ம் தேதி செல்லும் ரயில்களுக்கு இன்றும்,  அக்டோபர் 30ம் தேதி செல்லும் ரயில்களுக்கு நாளையும்,  அக்டோபர் 31ம் தேதி செல்லும் ரயில்களுக்கு  புதன்கிழமையும் முன்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web