இன்று பிரெஞ்ச் ஓபன் பைனல்ஸ் இறுதிப்போட்டி... ஜோகோவிச்.... கேஸ்பர் பலப்பரீட்சை! ஒரே போட்டியில் அடுத்தடுத்து சாதனைகள்!

 
ஜோகோவிச்

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் இன்று மோத உள்ளனர்.

முன்னாள் நம்பர் 1 வீரரும், 2 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (36) 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடிக்கும் முனைப்புடன் இன்றைய பைனலில் களமிறங்குகிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச், நடால் தலா 22 பட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கின்றனர். 

ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் உள்பட களிமண் தரை மைதானங்களில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளின் அசைக்க முடியாத வீரராக திகழும், நடப்பு சாம்பியன் நடால் காயம் காரணமாக நடப்புத் தொடரில் இருந்து விலகினார். .

23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் நடால் சாதனையை முறியடிப்பதுடன், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சின் சாதனையை சமன் செய்யும் முனைப்பிலும் ஜோகோவிச் இன்று களமிறங்குகிறார். தற்போதைய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் உள்பட இளம் வீரர்களின் சவாலை முறியடித்து பைனலுக்கு முன்னேறி உள்ளார் ஜோகோவிச். 

ஜோகோவிச்

இறுதிப்போட்டியில் அதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் (24) உடன் மோதுகிறார். சர்வதேச தரவரிசையில் ஜோகோவிச் மூன்றாவது இடத்திலும், ரூட் நான்காவது இடத்திலும் உள்ளன்ர. கேஸ்பர் தொடர்ந்து 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த யுஎஸ் ஓபனிலும் இவர் பைனல் வரை முன்னேறி இருந்தார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web