அதிமுகவின் எழுச்சியை கண்டு திமுக கூட்டணியில் சலசலப்பு... கடம்பூர் ராஜூ பேச்சு!

 
கடம்பூர் ராஜூ

அதிமுகவின் எழுச்சியை கண்டு திமுக கூட்டணியில் சலசலப்பு வந்துவிட்டது  என்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசினார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

கடம்பூர் ராஜூ

இதன் ஒரு பகுதியாக வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரவிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பேசிய அவர், "தற்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் அளித்து வரும் அமோக ஆதரவையும், அதிமுகவின் எழுச்சியையும் கண்டு திமுக கூட்டணியில் சலசலப்பு வந்துவிட்டது. வருகின்ற 2026 இல் அதிமுக கட்டாயமாக ஆட்சி அமைக்கும் என்று பேசினார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். 

அதிமுக கடம்பூர் ராஜூ

இந்நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏக்கள் என்.கே பெருமாள், சின்னப்பன், விளாத்திகுளம் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் தனஞ்ஜெயன், நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், மகேஷ், தனவதி, அன்புராஜ், அம்மா பேரவை செயலாளர் வரதராஜ பெருமாள், நகர செயலாளர் ராஜகுமார், ஆன்டி, குட்லக் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் பெருமாள்சாமி,  மகளிர் அணி சாந்தி, கவுன்சிலர் பிரியா, தகவல் தொழில்நுட்ப அணி மோகன், ஆனந்த்,  சுரேஷ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?