சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் துவங்கியது திமுக!

 
களைகட்டும் தேர்தல் ! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவம் சார்ந்த படிப்புக்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகிறது. இது குறித்து  திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசு 2017 முதல் நீட் தேர்வினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அப்போது முதல் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.  தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது. அப்போதெல்லாம் பாசிச பா.ஜ.க. அரசு தி.மு.க. மட்டும் தான் நீட் தேர்வை எதிர்க்கிறது.  தமிழ்நாடு மட்டும் தான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறது எனவும் விமர்சித்து வந்தது. தி.மு.க.வின் போராட்டங்களை விளம்பர அரசியல் என்றெல்லாம் சொல்லி குற்றம் சாட்டியது. 

திமுக

அதற்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் “ தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில்! சமவாய்ப்பு, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான நீட் தேர்வை இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலில் எதிர்க்கும் என்பதில் எந்த ஐயமில்லை என்று தெரிவித்து, என்றைக்கும் நீட் தேர்வை எதிர்த்தே தீர வேண்டுமென்று சென்னார். ஆனால், இன்று நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபிடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத்த  இந்தியாவிலுள்ள  பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது. 

நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தராத நிலையில், இன்று  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். இதனை வலியுறுத்தி ஸ்டாலின், முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீட் தேர்வில் உடனடியாக நடைபெற்றுள்ள ஒருமனதாக செயல்படுத்திட வேண்டும்.

திமுக இளைஞர் மாநாடு

இது குறித்து நடைபெறும் மிகப்பெரிய மோசடிகளை, குளறுபிடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும்  மத்திய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து திமுக மாணவர் அணிச் சார்பில் இன்று காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web