முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி; திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பேட்டி!
இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தெரிவித்தார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா செய்தியாளர்களிடம் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதமசிகாமணி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக அவர்களின் பிரச்சாரத்திற்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வெற்றி முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
