திமுக மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஒரே ஒரு தொகுதியில் பாஜக கூட்டணி பாமக சௌமியா அன்புமணி வெற்றிபெற்றுள்ளார். அந்த வகையில் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார். அண்ணாமலையின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி செய்து திமுகவினர் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட 35000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 2,02085 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 842 வாக்குகளை பெற்றுள்ளார். அதே போல் அதிமுக சிங்கை ராமச்சந்திரன் 90337 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கும் அண்ணாமலைக்கும் இடையே 39133 வாக்குகள் வித்தியாசம் உள்ளன. இதனால் கிட்டத்தட்ட திமுக கோவையை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கட்சியினர் மட்டன் பிரியாணி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என திமுகவினர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது கோவையில் அண்ணாமலையின் தோல்வி உறுதியாகி செய்யப்பட்டுள்ளது. இதனால் மட்டன் (ஆடு) பிரியாணி அளித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!