ஆக.13ம் தேதி சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... துரைமுருகன் அறிவிப்பு!
சென்னையில் ஆகஸ்ட் 13ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 13ம்தேதி (13.8.2025) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
