திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை... பெரும் பரபரப்பு!
திண்டுக்கல் யாகப்பன்பட்டியில் வசித்து வருபவர் 60 வயது மாயாண்டி ஜோசப் . திமுக பிரமுகரான இவரின் மனைவி நிர்மலா. இவர் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார். நிர்மலா உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மே.23ம் தேதி இரவு யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து, வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மாயாண்டி ஜோசப் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
தொடர்ந்து வந்த அவர்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாண்டி ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஏற்கனவே மாயாண்டி ஜோசப் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணத்திற்காக கொலை நடந்ததா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
