1,00,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் வேட்பாளர்கள்!

 
கனிமொழி பாலு

 தமிழகத்தில் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் பின்னடவை சந்தித்துள்ளனர். எதிர்பாராத சிலர் திடீரென ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முண்ணனியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம்  சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அதே போல் தூத்துக்குடியில்   1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை  வகித்து வருகிறார். தூத்துக்குடியில் நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 40,356 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜய சீலன் 31,866 வாக்குகள் பெற்று 4ம் இடத்திலும் உள்ளனர்.

திமுக அதிமுக
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 899 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக 45,757 வாக்குகளை பெற்றுள்ளது.
திமுக வின் டி .ஆர். பாலு ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web