ஞானசேகரனுடன் திமுக அமைச்சருக்கு தொடர்பு.. ஆதாரத்துடன் நிரூபித்த அண்ணாமலை!
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் ஞானசேகரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணைக்கு பின் ஞானசேகரன் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன்… pic.twitter.com/GTtOaWfrJa
— K.Annamalai (@annamalai_k) December 28, 2024
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த பதிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!