அடுத்த அதிர்ச்சி... தோட்டத்தில் திமுக எம்எல்ஏ உறவினர் கொடூரமாக வெட்டிக்கொலை!

 
கலைவாணன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திமுக எம்எல்ஏ கா.சொ.க. கண்ணனின் சகோதரி மகன், நேற்று நள்ளிரவு தனது தோட்டத்தில், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நெய்க்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கண்ணனின் உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு கலைவாணன் (30) என்ற மகன் உள்ளார்.

கலைவாணன்

திமுக பிரமுகரான கலைவாணன், அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில், நேற்றிரவு தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்காக கலைவாணன் சென்றிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற நிலையில், தோட்டத்தில் கலைவாணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
பின்னர் இது குறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலைவாணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 

கலைவாணன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைவாணன் வீட்டில், வைக்கோல் போரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது வீட்டின் சுவற்றில் ’தொடரும்’ என எழுதிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து கலைவாணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் கலைவாணன் வீட்டில் ’உயிரா? பொருளா?’ என பேப்பரில் எழுதி வீசி விட்டு மர்ம நபர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்தும் காவல் நிலையத்தில் கலைவாணன் புகாரளித்துள்ளதாகவும், போலீசார் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததே, கொலை சம்பவத்திற்கு காரணம் என கலைவாணன் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web