’அரைவேக்காட்டுத்தனமாக செயல்படும் திமுக எம்.எல்.ஏக்கள்’.. கொதித்தெழுந்த வேல்முருகன்!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடலூர் மாவட்டத்தில் எனது தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்.
அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்கவிருந்தபோது, நான் என்ன பேசப் போகிறேன் என்று புரியும் முன்பே, பின்வரிசையில் இருந்த திமுக எம்.எல்.ஏக்கள் எனக்கு எதிராக கூச்சல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் ஜனநாயக ரீதியாக ஏற்கத்தக்கது அல்ல. இதற்கு சபாநாயகரும், ஆளுங்கட்சி கொறடாவும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
நான் எந்தப் பிரச்சினையை எழுப்ப வருகிறேன் என்று தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது. இதற்கு ஆளுங்கட்சி கொறடாவும் , சபாநாயகரோ அனுமதிக்கக் கூடாது” என்றார். இதனால் திமுக கூட்டணியிடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!