2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக... பிரசாந்த் கிஷோர் வருகை!

 
பிரசாந்த் கிஷோர்

 2021 சட்டசபை தேர்தலில்  தி.மு.க., வை வெற்றி பெற வைக்க வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார்.  இதற்காக அவருக்கு, ரூ360 கோடி  சம்பளம் பேசப்பட்டு, தி.மு.க.,வால் வழங்கப்பட்டது.  அவர் வகுத்து கொடுத்த வியூகங்கள் அடிப்படையில், முதல்வர்  மருமகன் சபரீசனின் சகோதரி நிறுவனமான, 'பென்' வியூக வகுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது.அந்நிறுவனத்தால், பிரஷாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனம் போல செயல்பட முடியவில்லை.  2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதற்காக மே 10ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்த  பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.  

பிரசாந்த் கிஷோர்

2016 சட்டசபை தேர்தலின் போதும், தி.மு.க.,வுக்காக வியூகம் வகுத்துக் கொடுத்தவர் சுனில் கனுக்கோலு  . அவருடைய வியூகம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், பெரும் தோல்வி என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில், மாநில கட்சிகளுக்கு வெற்றி வியூகம் வகுத்து கொடுத்த பிரஷாந்த் கிஷோர் மீது தி.மு.க.,வுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வன்னியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுப்போம் என்ற அறிவிப்பு  வியூகத்தை, தி.மு.க.,வுக்கு சுனில் வகுத்துக் கொடுத்தார். அது, பெரும் தோல்வியில் முடிந்ததால்  2021 தேர்தலில்  சுனிலை கழற்றி விட்டு, பிரஷாந்த் கிஷோரை நியமித்துக் கொண்டது.  
பிரஷாந்த் கிஷோர் நிறுவனம் கொடுத்த அனைத்து ஆலோசனைகளையும், தி.மு.க., நிர்வாகிகளும், பிரமுகர்களும் களத்தில் செயல்படுத்தினர்.  2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உட்பட  அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்தது. இதன் பேரில்  தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். ஒரு நாளைக்கு, 1 கோடி என, சன்மானம் பெற்ற ஐபேக் நிறுவனம், தேர்தல் வெற்றிக்குப் பின் கிளம்பியது.அதன்பின், சபரீசன் சகோதரி நிறுவனம் அந்தப் பொறுப்பை ஏற்று, தி.மு.க.,வுக்கும், ஆட்சி நிர்வாகத் திட்டங்களுக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்தது.  

திமுக இளைஞர் மாநாடு
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு, அவர் களத்தில் பா.ஜ.,வை வளர்த்தெடுத்து இருப்பதோடு, சவாலான கட்சியாகவும் உருவாக்கிவிட்டார். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில், கட்டாய வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூக வகுப்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுகிறது. தற்போது மீண்டும் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டு உள்ளார் . விரைவில், அவர் தன் நிறுவன ஊழியர்களை தமிழகம் அனுப்பி, தி.மு.க.,வுக்கான வியூக வகுப்பு பணிகளை தொடங்கி இருக்கிறார் என  அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web