திமுக பிரமுகர் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை!

 
சாத்தம்மாள்

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர்  சாத்தையா. இவரது மனைவி 75 வயது சத்தியம்மாள் .  இவர்களது மகன் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.  

50 ஆண்டுகளுக்கு பின் மீட்டெடுக்கப்பட்ட குளம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
சத்தியம்மாள் ஜூன் 6ம் தேதி அதே பகுதியில் அமைந்துள்ள   கோட்டை குளத்துக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி குளத்திற்கு சென்றனர். அப்போது சத்தியம்மாள், குளத்தின் கரையோரம் தண்ணீரில் பிணமாக மிதந்தபடி கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  குளத்தில் இருந்து சத்தியம்மாளின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், சத்தியம்மாளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க கம்மல் மற்றும் தங்க சங்கிலி உட்பட 8 சவரன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  சத்தியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்
கொலையாளியை தேடிக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசர்குளம் பேட்டை பகுதியில் வசித்து வரும்  இப்ராஹிம்ஷா மகன் முகாஸ்ரின் (25) என்பவர் மூதாட்டியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் எலி வலைக்குள் மறைத்து வைத்திருந்த 8 சவரன் நகைகளை மீட்டனர். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web