திமுகவினர் அதிர்ச்சி...சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவர் பதவி பறிப்பு!

 
சங்கரன் கோவில்
 


திமுக கவுன்சிலர்களே எதிராக வாக்களித்ததால் திமுக நகரமன்ற தலைவர் பதவி பறிபோய் உள்ளது கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அதிமுகவைச் சேர்ந்த 13 நகர மன்ற உறுப்பினர்களும் திமுக - 9 அதன் கூட்டணியான மதிமுக - 2, காங்கிரஸ் - 1, எஸ்டிபிஐ - 1 மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர்.

சங்கரன் கோவில்

முன்னதாக நகராட்சித் தலைவர் போட்டியில் திமுக கூட்டணி சார்பில் 15 வாக்குகளும் அதிமுக சார்பில் 15 வாக்குகளும் சமமாக வாக்குகள் இருந்ததால் குலுக்கல் முறையில் திமுகவினரால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

சங்கரன்கோயில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், வாக்கெடுப்பு கூட்டத்திற்கு 29 நகர்மன்ற உறுப்பினர்கள் வந்த நிலையில் 28 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், உமா மகேஸ்வரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சங்கரன் கோவில்

இந்த வாக்கெடுப்பில் ஒருவர் மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக வாக்களித்தார்.  துணைத் தலைவராக உள்ள கண்ணன் தற்போது நகர்மன்றத் தலைவராக செயல்படுவார்.திமுக நகர்மன்றத் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே வாக்களித்துள்ளது திமுக தொண்டர்கள், கட்சி மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?