புதுக்கோட்டை திமுக செயலாளர் மாரடைப்பால் மரணம்.. புதுக்கோட்டை விரையும் துணை முதல்வர் உதயநிதி!!

 
ஆடியோஸ் செந்தில்
புதுக்கோட்டை திமுக மாநகரச் செயலாளர் செந்தில் மாரடைப்பால் காலமானார். அவரது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில் திருமண வேலைகளைப் பார்த்து வந்தவர் மாரடைப்பால் காலமான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடியோஸ் செந்தில்(55) திமுகவில் படிப்படியாக உயர்ந்து திமுக மாநகரச் செயலாளராக வளர்ந்துள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவர் நகராட்சி தேர்தலில் தனது மனைவி திலகவதியை நகர்மன்றத் தலைவராக்கினார்.

புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த விழாவில் மேயருக்கான செங்கோல் தங்கச் சங்கிலி அணிவித்து மேயர் நாற்காலியில் அமர வைத்தார். 

உடல்நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்தவர் தனது ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்து வந்தவர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சிகளை முடித்து விட்டு வீட்டின் முன்புறம் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் இருந்த மருத்துவரான அவரது சகோதரி மகள் முதலுதவி சிகிச்சைகள் அளித்துள்ளார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை வாசலில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் செந்திலை பரிசோதனை செய்தனர். அதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாநகர மேயரின் கணவரும், திமுக மாநகரச் செயலாளருமான செந்தில் உயிரிழந்த தகவல் பரவியதும் புதுக்கோட்டை திமுகவினர் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் அஞ்சலிக்காக கூடியுள்ளனர். 

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த நேரில்  புதுக்கோட்டை வருவதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டுள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web