மருத்துவ கல்லூரி சீட்களை திமுக விலைக்கு விற்றது... புட்டு புட்டு வைக்கும் அண்ணாமலை .. வைரல் வீடியோ!

 
அண்ணாமலை

 நீட் தேர்வு குறித்து அண்ணாமலை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அரசாங்கம் முதல் சில ரேங்க் எடுத்தவர்களின் பட்டியலை தனியார் மருத்துவ  கல்லூரிகளுக்கு அனுப்பி விடும். அவர்கள் அந்த மாணவர்களுக்கு சீட்டை கொடுத்து ப்ளாக் பண்ணி வைப்பார்கள். ரிசல்ட் வெளியானதும் அந்த மார்க்குகள் எடுத்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைத்து விடும். உடனே மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் இருந்து வித்ட்ரா செய்து கொள்வர்.

இந்த காலி இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகள் விலைக்கு விற்று விடும் என்கிறார் அண்ணாமலை.இந்த கொடுமைகள் தான் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்று கொண்டிருந்தது. இதிலிருந்து தமிழக மாணவர்களை காப்பாற்றவே நீட் நடைமுறைப்படுத்தப்பட்டது என அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். 
முன்னாள் திமுக அரசில் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி இது குறித்து பேசிய வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஆற்காடு வீராசாமி “ நிதி தேவை என்றால் கலைஞர் உடனே என்னை அணுகி எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறுவார். நான் உடனடியாக எம்.ஏ.எம். ஐ அணுகுவேன். அவர் பெரிய கல்வியாளர். தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகி.

ஆற்காடு வீராசாமி

அப்போதைய ஹெல்த் மினிஸ்டராகவும் இருந்ததால் வரவேற்பு பலமாக இருக்கும். ரிசல்ட் வந்ததும் முதல் லிஸ்ட் எங்களிடம் கேட்பார். நாங்களும் வழங்குவோம். எதற்கு எனக் கேட்டால் இந்த லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு எப்படியும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும். நாங்கள் இவர்களை கொண்டு நிரப்பினால் எப்படியும் விட்டுச்செல்வர். இந்த இடங்களை பணத்திற்கு நிரப்பிக் கொள்வோம் எனக்கூறி அந்த லிஸ்ட்டை கேட்டு வாங்கி செல்வார். நாங்கள் பணம் கேட்கும் போது ஒவ்வொரு முறையும் ஒன்று அல்லது இரண்டு கோடி, சில சமயங்களில் பணத்தேவையை பொறுத்து ஐந்து கோடி வரை கூட கொடுத்துள்ளார் என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web