40 இடங்களிலும் திமுக அமோக வெற்றி.. கொண்டாட்டத்தை தொடங்கிய தொண்டர்கள்!

 
திமுக

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள  40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில்  திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக 35 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.  2019 ல்  நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 75 வருட திமுக அரசியல் வரலாற்றில் இது புதிய சாதனை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.  

ஸ்டாலின்
ஆனால் அதிமுக 35 தொகுதிகளுக்கு மேல் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. 1984, 1989, 19991 ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணி முறையே 37, 38, மற்றும் 39 இடங்களில் வெற்றிபெற்றது  குறிப்பிடத்தக்கதாகும்.  தற்போது திமுக கூட்டணி இந்த முறை 35 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையில் 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web