வறுமை நீங்கி மகாலட்சுமி வாசம் செய்ய சனிக்கிழமைகளில் இதைச் செய்து பாருங்க!

 
ரூபாய்

எவ்வளவு சம்பாதித்தாலும் கைகளில் பணம் தங்கவில்லை என்று புலம்புகிறீர்களா? எப்போதும் வறுமை நம்முடனே குடிகொண்டிருக்கிறதா? சனிக்கிழமை ஸ்ரீநிவாசனுக்கு உகந்த தினம். வறுமை நீங்கி, எப்போதும் மகாலட்சுமி நம்முடன் வாசம் செய்ய சனிக்கிழமைகளில் இந்த விஷயத்தைத் தொடர்ந்து செய்து பாருங்க. நம்பிக்கையுடன் செய்யும் எந்த காரியத்திற்கும் முழு பலன்கள் உண்டு. ஒவ்வொரு கிழமைக்குமான பலன்களை இந்த கட்டுரையில் தினமாலை வாசர்களுக்காக எழுதி இருக்கிறோம். நம் இணையதளத்தின் ஆன்மீக பக்கத்திற்கு வாசகர்கள் கொடுத்து வரும் ஆதரவு வியப்பளிக்கிறது. நிறைய பேர் தங்களது ஆன்மீக சந்தேகங்களையும், பரிகார பூஜை முறைகளையும் தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள். அவற்றை நம் சுவாமிஜியிடம் கேட்டு, தொடர்ந்து இந்த பகுதியில் எழுதி வருகிறோம். பயன் பெறுங்கள்!

நம்பிக்கையோடு சனிக்கிழமைகளில் இதைச் செய்து பாருங்க. உங்களுடைய செல்வ வளர்ச்சியை நிச்சயமாக உணர்வீங்க. நம் இந்து மத ஆலயங்கள் அனைத்திலும் தல விருட்சம் உண்டு. இவை யாவும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல விஞ்ஞான பூர்வமாகவும் மகத்துவமானவை. அந்த வகையில் அரச மரத்திற்கு இருக்கும் சிறப்பே தனிதான். அறிவியல் ரீதியாகவே மற்ற மரங்களை காட்டிலும் அரசமரம் மட்டுமே 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதனாலேயே அரசமரத்தை வழிபடுவதை அறிவுறுத்துகின்றன நம் சம்பிரதாய நம்பிக்கைகள்.

இப்படி செய்து வந்தா மகாலட்சுமியின் பேரருள் நிரந்தரமா நம் இல்லத்தில் தங்கும்!!

அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

  • தீராத நோய்கள் தீர அரச மரத்தை ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
  • மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெற திங்கட்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.
  • அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் கூடுதல் சிறப்பு.
  • செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.

இப்படி செய்து வந்தா மகாலட்சுமியின் பேரருள் நிரந்தரமா நம் இல்லத்தில் தங்கும்!!

  • வியாபாரம் பெருக புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வரவேண்டும்.
  • கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.
  • சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வர வேண்டும்.
  • வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெற சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.

அதே போல் அரச மரத்தை

3 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

5 முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

9 முறை வலம் வந்தால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

11முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும்.

18 முறை வலம் வந்தால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

108 முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது காலம் காலமாக அனுபவஸ்தர்களின் வாக்கு. மன உறுதியுடன் முழு நம்பிக்கையுடன் இதனை கடைப்பிடிக்க வேண்டிய வரம் பெறலாம்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web