ஜீன்ஸ் பேண்ட் பார்த்து பெண்கள் மயங்கி விடுவார்களா?? திருமாவளவன் ஆவேசம்!

 
தொல்.திருமாவளவன்

இயக்குனர் லோக பத்மநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செம்பியன் மாதேவி' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் காதலை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் அரசியல்வாதிகளை விட திரையுலகினர் தந்திரமாக உள்ளனர்’ என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடக காதல் என்ற ஒன்று கிடையாது. டி-சர்ட், ஜுன்களை பார்த்து பெண்களை மயங்கி விடுவார்களா? இது எங்கள் வீட்டு பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு" என்றார். மேலும், “படத்தை பார்த்தாலன்றி முழுமையாக சொல்ல முடியாது. திரையுலகில் இருப்பவர்களும் காதலை அரசியலாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். என் பெயரை சொல்லி பிழைக்கிறார்கள்.

பிழைத்து விடுங்கள். இந்த விஷயத்தில் நான் அவர்களுக்கு ஒரு மூலதன பொருளாக இருக்கிறேன். காதல் என்பது அவ்வப்போது பேசக்கூடிய விஷயம். உயர்ந்த சிறந்த பொருள். அது மனித குலத்தை வாழ்க்கையின் விடியலிலிருந்து வழிநடத்தியது. இதை யாரும் சொல்வதில்லை. இது இயற்கையான உணர்வு. "காதலினால்தான் காதலைப் புரிந்து கொள்ள முடியும்." மேலும் அன்பை கற்பிக்க முடியாது என்று கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web