தூங்கி எழுந்ததுமே செல்போன் பார்க்கறீங்களா? என்னென்ன பிரச்சனைகள்? மருத்துவர்கள் எச்சரிக்கை!
தற்போதைய வாழ்க்கை முறையில் ஆறுமாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆறாம் விரலாய் மொபைல் போன்கள் முளைத்து விட்டன. மொபைல் இன்றி வாழ்க்கையே இல்லை என்றாகி விட்டது. காலை தூங்கி எழுந்ததும் இறைவனை நினைத்து எழுந்த காலம் மலையேறி விட்டது. காலை எழுந்ததும் முதல் வேலையாக மொபைல் எடுத்து பார்த்து அப்டேட் செய்து கொள்கின்றனர்.
இதனால் என்ன என்பது தான் பலரின் கேள்வியும். ஜலந்தரில் உள்ள மன்ஜீத் சைனி மருத்துவமனையின் MD மனநல மருத்துவர், நிபுணர் டாக்டர் ஷுப்கர்மன் சிங் சைனி இதுகுறித்து அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். அதில் இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இது NoMoPhobia அதாவது, மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொபைலில் சமூக வலைதள நோட்டிபிகேஷனை பார்த்து அன்றைய நாளைத் தொடங்குவது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுத்து விடும். இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட், தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உடலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். எழுந்ததும் நீல ஒளியில் கண்களை செலுத்துவதால் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி நாள் முழுவதும் சோர்வுக்கு வழிவகுத்து அடுத்த இரவில் தூங்குவதை கடினமாக்கி விடுகிறது.
காலையில் எழுந்தவுடன் மொபைலை பார்ப்பதால் தியானம், உடற்பயிற்சி என பலவகையான ஆரோக்கியமான காலை வேலைகளை மறக்கடிக்க செய்து அர்த்தமுள்ள செயல்களில் இருந்து உங்களைத் திசை திருப்பும். இப்பழக்கத்தால் கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!