அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்.. பிரசவத்தின் போது துடிதுடித்து உயிரிழந்த குழந்தை!

பலருக்கும் குழந்தை வரம் என்பது திருமண வாழ்க்கையில் அடுத்த கட்டம். உலகம் முழுவதும் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, நாடுகளின் எல்லைகளைக் கடந்து தாய்மை அடைவதை பெண்கள் அத்தனை நெகிழ்ச்சியாக தங்கள் வாழ்வு பூரணமடைந்ததாக கருதுகிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்பது எத்தனை வருடங்களானாலும் பசுமையாக, நெகிழ்ச்சியாக அசைப்போடும் நினைவுகளாகவே இருக்கும். இந்நிலையில், தனது முதல் பிரசவத்திலேயே, அறுவை சிகிச்சையின் போது, குழந்தையின் அந்தரங்க உறுப்பை மருத்துவர் தவறுதலாக வெட்டியதால் அழகான, பச்சிளம் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை நிலைக்குலைச் செய்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த ஜோடி, திருமணமாகி சில வருடங்களாக குழந்தைக்காக ஏங்கி காத்திருந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தேவநாகரெ மாவட்டம் சிக்கத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மனைவி அம்ருதா. இவர்களுக்கு திருமணமாக சில வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ள நிலையில், அம்ருதா கர்ப்பமடைந்துள்ளார். அந்த குடும்பமே தங்களது முதல் வாரிசு வரப் போகிறது என்று அம்ருதாவைக் கொண்டாடி கவனமுடன் பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அம்ருதா, கடந்த ஜூன் 17-ம் தேதி சிக்கத்தேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இயற்கையாக பிரசவம் நடக்க சூழல் எட்டப்படாத காரணத்தால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவர் நிஜாமுதீன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர் தவறுதலாக குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டி இருக்கிறார். இதனால் குழந்தை உயிருக்கு போராடி வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த விஷயம் குழந்தையின் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மேற்படி மருத்துவ துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!