பரபரப்பு வீடியோ... மருத்துவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி!

 
பயிற்சி மருத்துவர்

 மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த  முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், மாநில சுகாதாரத் துறையின் ஊழலுக்கு முடிவு கட்ட கோரியும் இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன்  புதன்கிழமை மாநில அரசு சாா்பில் மருத்துவா்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து  பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் இந்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
இவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மருத்துவர் அனிகேட் மஹாடோ என்பவரின் உடல்நிலை நேற்றிரவு  திடீரென  மோசமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உடல் நலம் தேறுவார் என  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தால் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!